டிராக்டர் மோதி மின்கம்பம் முறிந்தது; அருகில் நின்ற வாலிபர் படுகாயம்

டிராக்டர் மோதி மின்கம்பம் முறிந்தது; அருகில் நின்ற வாலிபர் படுகாயம் அடைந்தார்.
டிராக்டர் மோதி மின்கம்பம் முறிந்தது; அருகில் நின்ற வாலிபர் படுகாயம்
Published on

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனுசாமி மகன் சிவராமன்(வயது 20). இவர் நேற்று உடையார்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தனது அண்ணன் லல்லு பிரசாத்துடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது கடலூர் மாவட்டம் ஆதனூர் கிராமத்தை சேர்ந்த தனசிங்கு மகன் ராதாகிருஷ்ணன்(23) என்பவர் தனது டிராக்டரில் இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்து கொண்டு இருந்தார். உடையார்பாளையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த மின் கம்பத்தில் டிராக்டர் மோதியதில் மின் கம்பம் முறிந்து விழுந்தது. அப்போது அருகில் நின்று கொண்டு இருந்த சிவராமன் மீது மின்கம்பம் விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com