மணல் கடத்தலை தடுக்க முயன்றபோது சப் - இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த சோகம்...!

போலீசார் தடுத்து நிறுத்தியதால் பயந்துபோன டிராக்டர் ஓட்டுநர், நிறுத்தாமல் வண்டியில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டார்.
சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
Published on: 

தஞ்சாவூர்,

மணல் கடத்தலை தடுக்க முயன்ற சப் - இன்ஸ்பெக்டர் மீது டிராக்டர் மோதியதால் அவர் பலத்த காயமடைந்தார்.

மணல் கடத்தல்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா மெலட்டூர் கோடுகிழி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து தகவலின் பேரில் மெலட்டூர் காவல் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் முத்துவேல் மற்றும் தலைமை காவலர் ராமர் இருவரும் இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கோடுகிழி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிரே ஒரு டிராக்டர் வந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் அதை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

படுகாயம்

அப்போது அச்சத்தில் இருந்த டிராக்டர் ஓட்டுநர் நிறுத்தாமல் வண்டியில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டார். ஆனால் டிராக்டர் நிற்காமல் முன்னோக்கி சென்று, சப் - இன்ஸ்பெக்டர் முத்துவேல் மீது மோதியது. டிராக்டர் மோதியதில் சப்- இன்ஸ்பெக்டரின் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அந்த இடத்தில் கீழே விழுந்து வேதனையில் துடித்தார். இதனை பார்த்த தலைமைக் காவலர் ராமர், மெலட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கிருந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் போதுமணி மற்றும் காவலர்கள் முத்துவேலை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com