வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது; தந்தை-மகள் உயிர் தப்பினர்

வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் தந்தை-மகள் உயிர் தப்பினர்.
வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது; தந்தை-மகள் உயிர் தப்பினர்
Published on

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை கிராமத்தில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் தனது மகளுடன் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வீட்டின் அருகே இருந்த கல்யாண முருங்கை மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் ஒரு பக்க சுவற்றின் சிறு பகுதியும், வீட்டின் மேல் இருந்த ஓடுகளும் உடைந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் வீட்டிற்குள் இருந்த விஸ்வநாதன் மற்றும் அவரது மகள் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் மரம் முறிந்து விழுந்ததில் அருகில் இருந்த மின்கம்பமும் உடைந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் தமிழரசன், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன், உதவி மின் பொறியாளர் இளையராஜா உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com