திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது
Published on

பொங்கல் விடுமுறைக்காக வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்பவர்களும், பள்ளி, கல்லூரிகளில் படித்து வருபவர்களும் சொந்த ஊருக்கு வந்து பொங்கல் கொண்டாடினர். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில் நேற்று இரவு திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. திருச்சியில் இருந்து சென்னை, கோவை என பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை செல்வதற்கு நீண்ட வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் எடுத்து சென்றனர். இதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தற்காலிக பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் கூட்டத்தால் பரபரப்புடன் காணப்பட்டது. பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி சென்று வர போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com