

சென்னை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சுமார் 13 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினா தங்களுடைய கருத்துகளையும் இரங்களையும் தெரிவித்து வந்தனா.
இதைத்தொடாந்து தமிழக பாஜக தலைவா தமிழிசை சவுந்தராஜன் தற்போது பேட்டி அளித்துள்ளார். அவா கூறுகையில்,
தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் வேலைவாய்ப்பை நாம் இழக்கிறோம் என்பதுதான் உண்மை என்று தமிழிசை கூறியுள்ளார். மேலும் சமூகவிரோதிகளால்தான் போராட்டம் கலவரமானது என கூறினால் எங்களை சமூகவிரோதி போல் பார்க்கிறார்கள் என்று அவா தெரிவித்துள்ளார்.