பெண்களின் தற்காப்புக்காக “அன்மியூட்” இயக்கம் ஐ.ஐ.டி. மாணவர்கள் தொடங்கினர்

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான - பெண்களின் தற்காப்புக்காக “அன்மியூட்” இயக்கம் ஐ.ஐ.டி. மாணவர்கள் தொடங்கினர்.
பெண்களின் தற்காப்புக்காக “அன்மியூட்” இயக்கம் ஐ.ஐ.டி. மாணவர்கள் தொடங்கினர்
Published on

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் சமூக நல இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர். அன்மியூட் என்று அழைக்கப்படும் அந்த திட்டத்தில் மாதவிலக்கின்போது சுத்தமாக இருத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகள் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது. இந்த முன்முயற்சியின் மூலமாக, பெண்களை குரல் எழுப்பும்படி தூண்டுவது மாணவர்களின் நோக்கமாகும். மேலும், விழிப்புணர்வு பிரசாரங்களையும் மாணவர்கள் நடத்திட முனைந்துள்ளனர். ஆண்டுதோறும் சென்னை ஐ.ஐ.டி. நடத்தும் சாஸ்த்ரா-2022' என்னும் தொழில்நுட்ப திருவிழாவின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தில் சுடர், கோ ஹைஜீன், கிரை, சாக்யா, ஸ்வயம் போன்ற அரசு சாரா அமைப்புகளுடன் மாணவர்கள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கடந்த அக்டோபர் 16-ந்தேதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சாஸ்த்ரா குழுவினர் ஒரு சமூகநல பிரச்சினையை கையில் எடுத்து, அதை சமாளிப்பதற்கான முன்முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த ஆண்டில் சாஸ்த்ரா-2022 என்னும் திட்டத்தின் கீழ், அன்மியூட் இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இந்த அன்மியூட் இயக்கம் கடந்த அக்டோபர் 24-ந்தேதியன்று நடிகர் ஆஹ்ஸாஸ் சன்னா முன்னிலையில் காணொலி நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com