காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

காஞ்சிபுரம்,

உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே மாதம் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று கொடியேற்றத்தை ஒட்டி, அதிகாலை 4 மணி அளவில் கோவிலின் மூலவர் பகுதியில் இருந்து உற்சவர் வரதராஜ பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியுடன் கொடி மரத்தின் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் கருட முகம் பொறித்த பிரம்மோற்சவத்தின் விழாக் கொடியை கோயில் பட்டச்சாரியார்கள் மந்திரங்கள் சொல்லி கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை,மாலை, என இரு வேளையும் வரதராஜ பெருமாள் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.

கொடியேற்றத்தை ஒட்டி அலங்கார மண்டபத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி கோவில் உட்பிரகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய உற்சவங்களான கருட சேவை உற்சவம் மே 13ம் தேதியும், திருத்தேர் உற்சவம் மே 17-ம் தேதியும் நடைபெறுகிறது .மே மாதம் 19ஆம் தேதி தீர்த்த வாரியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com