ஆசிரியர்கள் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு

ஆசிரியர்கள் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு.
ஆசிரியர்கள் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக அண்ணாமலை என்பவர் உள்ளார். இதே பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியர் செழியன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். 2 பேருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரிடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து தாக்கி கொண்டனர். அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதை யாரோ செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரவ விட்டனர். இந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போளூர் கல்வி மாவட்ட அதிகாரி மூலம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com