மக்கள் குரலே எங்களின் வழிகாட்டி - நயினார் நாகேந்திரன்

நாம் அளிக்கும் வாக்குறுதிகள் வெறும் சொற்களாக அல்ல செயலால் நிரூபிக்கப்படும் நம்பிக்கையாக இருக்கும்.
மக்கள் குரலே எங்களின் வழிகாட்டி - நயினார் நாகேந்திரன்
Published on

சாத்தூர்,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இன்றைய தினம் காலை சாத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் வாக்கு சேகரிப்பு பயணம் எனக்கு அளவற்ற உற்சாகத்தையும் உறுதியான நம்பிக்கையையும் வழங்கியது.

ஒவ்வொரு தெருவிலும், பொதுமக்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் கோரிக்கைகள், அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், மற்றும் எதிர்காலத்திற்கான அவர்களின் நம்பிக்கைகள் அனைத்தையும் நேரில் சந்தித்து கவனமாக கேட்டறிந்தோம். அவர்களின் ஒவ்வொரு கருத்தும் மதிப்புடன் பதிவு செய்யப்பட்டது. மக்கள் குரலே எங்களின் வழிகாட்டி; அவர்களின் எதிர்பார்ப்புகளே எங்கள் செயல்திட்டத்தின் மையமாக இருக்கும் என்ற உறுதியை மீண்டும் வலியுறுத்திக் கொண்டோம்.

நமது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், இப்பகுதி மக்களின் அனைத்து குறைகளும் முன்னுரிமையுடன் எடுத்துக்கொள்ளப்பட்டு, விரைவாகவும் திறம்படவும் தீர்வு காணப்படும் என்பதை நான் உறுதியுடன் தெரிவிக்கிறேன்.

நாம் அளிக்கும் வாக்குறுதிகள் வெறும் சொற்களாக அல்ல செயலால் நிரூபிக்கப்படும் நம்பிக்கையாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com