மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 119 அடியாக நீடிப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 119 அடியாக நீடித்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 119 அடியாக நீடிப்பு
Published on

சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நொடிக்கு 19 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் அணையின் நீர்மட்டம் 119 அடியாக நீடிக்கிறது.

நேற்று நொடிக்கு 26 ஆயிரத்து 440 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 21 ஆயிரத்து 27 கன அடியாகக் குறைந்தது. அணையின் சுரங்க நீர்மின் நிலையம் வழியாக நொடிக்கு 19 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்குக் கால்வாய்ப் பாசனத்திற்கு 150 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 119 அடியாக நீடிக்கிறது. அணையின் நீர் இருப்பு 91.8 டிஎம்சியாக உள்ளது. உபரிநீர் திறப்பதை நிறுத்தினாலோ, நீர்வரத்து அதிகரித்தாலோ அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com