

சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
மக்கள் தொகை அதிகமுள்ள மற்றும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே போகின்ற நகர்ப்புற பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு இப்போது இந்த அவசர, அவசிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
நோய் பரவலின் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்தில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழு ஊரடங்கின் கட்டாயத்தை கவனத்தில் கொண்டு, அரசு அறிவித்திருக்கிற முழு ஊரடங்குக்கான நாட்களில் அரசின் விதிமுறைகளை 100 சதவீதம் கடைப்பிடிப்போம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.