குடிபோதையில் தகராறு கிரிக்கெட் மட்டையால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி

குடிபோதையில் தகராறு செய்த டிரைவரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொன்ற அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் தகராறு கிரிக்கெட் மட்டையால் தாக்கி டிரைவரை கொன்ற மனைவி
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 45). இவருடைய மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 9 மற்றும் 8 வயதில் 2 மகன்கள் உள்ளனர். டிரைவராக பணிபுரிந்து வந்த ராஜாராம் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாகவும், மது போதையில் வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராஜாராம் தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

கிரிக்கெட் மட்டையால் தாக்கினார்

இதனால் ஆத்திரம் அடைந்த ரேவதி அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையால் ராஜாராம் தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ராஜாராம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேவதியை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com