ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு

குருபரப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு
Published on

குருபரப்பள்ளி:-

குருபரப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

3 யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மேலுமலை மற்றும் பிக்கனப்பள்ளி வனப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் கிருஷ்ணகிரி, மேலுமலை சூளகிரி சுற்றுவட்டார வனப்பகுதிகளில் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள விளைநிலங்களை நாசம் செய்து வந்தன.

நேற்று காலை பிக்கனப்பள்ளி வனப்பகுதியில் இருந்து எண்ணெகொள் புதூர் கிராமத்தில் புகுந்த 3 காட்டு யானைகள் அப்பகுதியில் கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்த காட்டு யானைகளை கண்டு காலையில் வயலுக்கு சென்ற விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விவசாயிகளை துரத்தின

இதையடுத்து காட்டு யானைகளை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காட்டுக்குள் விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் விவசாயிகளை துரத்தியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது 3 காட்டு யானைகளையும் விரட்டும் பணியில் ராயக்கோட்டை வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். யானைகளின் அட்டசாகத்தால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com