பெண் பரிதாப சாவு

போடியில் குழந்தை பெற்று 5 மாதங்களில் பெண் பரிதாபமாக இறந்தார்.
பெண் பரிதாப சாவு
Published on

போடி சேதுபாஸ்கரன் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி பவித்ரா (வயது 23). பவித்ராவுக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் அவருக்கு தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி பவித்ரா வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பவித்ரா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பவித்ராவின் தந்தை ரமேஷ் போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பவித்ராவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.    

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com