பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

குன்னூர் நகராட்சி அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
Published on

குன்னூரில் சமீப நாட்களாக விதிமீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிலர் ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருப்பதாக கூறி கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட டோபி கானா பகுதியில் சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அதனை தடுத்து நிறுத்த புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி ஜெயலட்சுமி என்பவர் நகராட்சி அலுவலகம் முன்பு மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அவரை தடுத்து, அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com