நெல்லை; சாலையில் கிடந்த ரூ. 26 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த பெண்...!

சாலையில் கிடந்த ரூ.26 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
நெல்லை; சாலையில் கிடந்த ரூ. 26 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த பெண்...!
Published on

நெல்லை,

நெல்லை மாட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மேல புத்த நேரி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மனைவி பொன்னம்மாள் (வயது55). இவர் பாளையங்கோட்டை மகாராஜ நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று பொன்னம்மாள் வேலைக்கு செல்வதற்காக மகாராஜ நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரமாக கிடந்த ஒரு பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் ரூ.26 ஆயிரத்து 380 இருந்தது. உடனே பொன்னம்மாள் அந்த பணத்தை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

சாலையோரம் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த பொன்னம்மாளை போலீசார் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com