பெண்ணை தாக்கியவர் கைது

விழுப்புரத்தில் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணை தாக்கியவர் கைது
Published on

விழுப்புரம் பெரியார் நகரில் வசித்து வருபவர் சண்முகம் மனைவி மகாலட்சுமி (வயது 36). சண்முகமும், ஜெயராமனும் (48) சகோதரர்கள் ஆவர். இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இவர்கள் சிமெண்ட், ஜல்லிக்கற்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயராமனின் வீட்டுக்கு சிமெண்ட் லோடு இறக்க வந்த லாரி, மகாலட்சுமியின் வீட்டு முன்பு நின்றபோது வாசலில் பள்ளம் ஏற்பட்டுவிட்டது. இதனை மகாலட்சுமி தட்டிக்கேட்டபோது அவரை ஜெயராமன், மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலட்சுமி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஜெயராமன், மணிகண்டன் ஆகிய இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர்.

இதேபோல் ஜெயராமன் மனைவி சுதா, தாலுகா போலீசில் மற்றொரு புகார் செய்தார். அதில் தன்னை சண்முகம், அவரது மனைவி மகாலட்சுமி ஆகியோர் தாக்கியதாக கூறியிருந்தார். அதன்பேரில் சண்முகம், மகாலட்சுமி ஆகிய இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com