கிரிக்கெட் பேட்டால் பெண்ணை தாக்கியவர் கைது

கிரிக்கெட் பேட்டால் பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கிரிக்கெட் பேட்டால் பெண்ணை தாக்கியவர் கைது
Published on

காரைக்குடி,

காரைக்குடி அருகே கல்லல் மங்கம்மா சாலை இந்திராநகரை சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி தேவிகா (வயது 36). தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். முருகானந்தத்துக்கும், அவரது அண்ணன் குமாரவேலுக்கும் முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் குமாரவேலு வளர்க்கும் கோழிகள் முருகானந்தம் வீட்டிற்குள் சென்று அசுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவிகா, குமாரவேலுவிடம் கேட்டபோது ஆத்திரமடைந்த அவர் கிரிக்கெட் பேட்டால் தேவிகாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரவேலுவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com