பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது
பெண்ணை தாக்கியவர் கைது
Published on

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுடலை முத்துப்பிள்ளை. இவரது மனைவி தாணம்மாள் (வயது 60). இவர்களது மகனிடம் அதே பகுதியை சேர்ந்த ஜெயலலித்குமார் (34) என்பவர் தகராறு செய்தார். இதை தாணம்மாள் தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த ஜெயலலித்குமார், தாணம்மாளை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த தாணம்மாள் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலலித்குமாரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com