பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது

பெண்ணை தாக்கியவர் கைது
Published on

நெகமம்

நெகமத்தை அடுத்த கொல்லபட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மனைவி முருகாத்தாள்(வயது 48). இவரது வீட்டில் பழுது பார்கும் பணி நடைபெற்று கொண்டு இருந்தது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை, பக்கத்து வீட்டில் வசிக்கும் குருவாயூரப்பன்(38) என்பவர் தடுத்து நிறுத்தி மிரட்டியதாக தெரிகிறது. இதை தட்டி கேட்ட முருகாத்தாளை தகாத வார்த்தைகளால் பேசி குருவாயூரப்பன் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குருவாயூரப்பனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com