‘இமானுவேல் சேகரனாரின் பணிகளும், தியாகமும் நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்’ - மு.க.ஸ்டாலின்

இமானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் தி.மு.க. அரசு மேற்கொண்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘இமானுவேல் சேகரனாரின் பணிகளும், தியாகமும் நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்’ - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

சமத்துவ போராளி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளினை அரசு விழாவாகக் கொண்டாட ஆணை, பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என அவரது நினைவைப் போற்றும் சிறப்பான பணிகளைக் கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொண்டோம்.

நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்த இமானுவேல் சேகரனாரின் பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய நமது முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும்! இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க!”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com