கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

கூலித்தொழிலாளி

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் ஆர்.என். கண்டியை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 48). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். எட்டியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இவர் மாயமாகவே அவரை தேடி வந்தனர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் வயலூர் கூற்றோடு அருகே உள்ள கிணற்றில் இவரது உடல் கிடப்பதை கண்ட அவரது மகன் பிரவீன் குமார் பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து இது பற்றி விசாரித்து வருகிறார்.

மேலும் இவர் மது குடித்துவிட்டு சென்றதால் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com