மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
மயங்கி விழுந்த தொழிலாளி சாவு
Published on

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 51). ஜவுளி நிறுவன கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜவுளி நிறுவனத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கு பணிபுரிந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com