மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

ராணிப்பேட்டையில் மயங்கி விழுந்து தொழிலாளி இறந்தார்.
மயங்கி விழுந்து தொழிலாளி சாவு
Published on

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் மயங்கி விழுந்து தொழிலாளி இறந்தார்.

ராணிப்பேட்டை பிஞ்சி ஜெயராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (வயது 35). கூலித்தொழிலாளி. இவர் ராணிப்பேட்டை பிஞ்சி அருகில் உள்ள பங்க் கடைக்கு பொருட்களை வாங்க சென்றார். அப்போது படிஏறும்போது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com