தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

லத்தேரி அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். அவரது சாவிலல் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.
தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
Published on

கே.வி.குப்பம்

லத்தேரி அருகே தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார். அவரது சாவிலல் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.

கே.வி.குப்பம் தாலுகா, வடுகந்தாங்கல், ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் தாமோதரன் (வயது 23). கூலித் தொழிலாளியான இவர் லத்தேரி பஸ் நிலையம் அருகில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று காலை இவர் வேலை செய்து கொண்டு இருந்தபோது திடரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக லத்தேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பரிசோதனை செய்தபோது தாமோதரன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், தாமமோதரனின் சாவில் மர்மம் உள்ளது லத்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com