தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

வேலூர் பழைய பஸ் நிலையம் அர தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.
தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
Published on

வேலூரை அடுத்த கருகம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 50), தொழிலாளி. இவர் நேற்று மாலை வேலை விஷயமாக வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு வந்ததாகவும், அந்தப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதைக்கண்ட பொதுமக்கள் அவர் முகத்தின் மீது தண்ணீரை தெளித்தனர். ஆனால் அவர் எந்திரிக்கவில்லை. அதையடுத்து அவர்கள் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று அவரை பரிசோதித்தனர். அப்போது குப்புசாமி இறந்து போனது தெரிய வந்தது. அதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து குப்புசாமி உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்து உயிரிழந்தாரா?, அல்லது மதுபோதையால் தடுமாறி கீழே விழுந்து இறந்து போனாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com