மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கருங்கல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள கிள்ளியூர் எட்டோணிவிளையை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது44), கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று கிள்ளியூர் அய்யன்விளை பகுதியில் ஒரு வீட்டில் 2-வது மாடியில் நின்று கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சந்திரகுமாரி கொடுத்த புகாரின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com