மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி இறந்தா.
மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
Published on

அந்தியூர்

அந்தியூர் அருகே குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது 40). மரம் ஏறும் தொழிலாளி. இவர் முரளி சென்னம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தாட்டத்தில் தேங்காய் பறிக்க சென்றார். அப்போது அங்குள்ள ஒரு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயன்றபோது அதில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வராசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com