கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி

வீரவநல்லூர் அருகே கால்வாயில் விழுந்து தொழிலாளி பலியானார்.
கால்வாயில் விழுந்து தொழிலாளி பலி
Published on

வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குழி வடக்கு தெருவை சேர்ந்தவர் தினகரன். இவரது மகன் சுப்பிரமணியன் (வயது 35), சமையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீரவநல்லூர் அருகே உள்ள கொட்டாரக்குறிச்சி கால்வாயில் குளிக்க சென்றார். இந்நிலையில் நேற்று காலை அவரது உடல் சடலமாக மிதந்தது. தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் உடனடியாக அவரது உடலை மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com