நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி படுகாயம்

நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
நெல் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி படுகாயம்
Published on

அரியலூர் மாவட்டம் கா.அம்பாபூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48). இவர் விளாங்குடி-ஒரத்தூர் சாலையில் உள்ள நெல் குடோனில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 7-ந் தேதி செல்வராஜ் ஒரு லாரியில் நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு இருந்தார். அப்போது அந்த லாரியில் சரியாக அடுக்கப்படாமல் இருந்த நெல் மூட்டைகள் சரிந்து செல்வராஜ் இடுப்பிலும், காலிலும் விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com