முட்டை சாதம் சாப்பிட்ட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

முட்டை சாதம் சாப்பிட்ட தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
முட்டை சாதம் சாப்பிட்ட தொழிலாளி மயங்கி விழுந்து சாவு
Published on

மயங்கி விழுந்தார்

திருச்சி செந்தண்ணீர்புரம், கண்ணகி தெருவை சேர்ந்தவர் லூயிஸ். இவருடைய மகன் லிவிங்ஸ்டன் (வயது 22). இவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று மதியம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் முட்டை சாதம் வாங்கி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

சாவு

இதை பார்த்த நிறுவனத்தின் மேலாளர் தங்கராஜ், அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com