இந்தியாவில் அப்பட்டமாக மனித உரிமைகள் மறுக்கப்படுவதை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது- ப.சிதம்பரம்

இந்தியாவில் அப்பட்டமாக மனித உரிமைகள் மறுக்கப்படுவதை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
இந்தியாவில் அப்பட்டமாக மனித உரிமைகள் மறுக்கப்படுவதை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது- ப.சிதம்பரம்
Published on

சென்னை

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்து இருப்பதாவது:-

இன்று ஆகஸ்ட் 6-ம் தேதி. அனைத்து அரசியல் கட்சிகளும், சரியாகக் சிந்திக்க்கூடிய குடிமக்கள் அனைவரும், கடந்த ஓர் ஆண்டாக சிறையில் இருப்பதைப் போன்று வாழ்ந்துவரும் 75 லட்சம் காஷ்மீர் மக்களைப் பற்றி நினைத்துப்பாருங்கள்.

ஜனநாயக ரீதியில் செயல்படும் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பரூக் அப்துல்லா, தன்னுடைய கூட்டம் குறித்து முன்பே அறிவித்தும் அவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை. இது பாஜகவால் காட்சிப்படுத்தப்படும் புதிய ஜனநாயகம் ?

அனைத்துத் தலைவர்களும் வீட்டுச் சிறையில் இருக்கிறார்கள். நீங்கள் கேள்வி எழுப்பினால், நீதிமன்றத்தில் சென்று யாரும் வீட்டுக்காவலில் இல்லை என்று கூறுவார்கள். வீட்டுக் காவல் என்பது சட்டவிரோத கருவி. கிரிமினல் சட்டத்தில் கீழ் அதற்கு எந்த சட்டஅங்கீகாரமும் இல்லை. இது அதிகார துஷ்பிரயோகம்

மெகபூபா முப்தியை விடுவிக்கவும், வீட்டுக்காவலில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அரசியலமைப்புச் சட்டப்படி சுதந்திரமாக நடமாடவும் நாம் அனைவரும் நமது குரலை ஒன்றாக எழுப்ப வேண்டும்.

இந்தியாவில் அப்பட்டமாக மனித உரிமைகள் மறுக்கப்படுவதை உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா பெருமையாகக் கூறிக்கொள்ளும், சுதந்திரமான மற்றும் ஜனநாயக நாடு என்பது நாள்தோறும் குறைந்துகொண்டே வருகிறது இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com