காபி விளைச்சல் அமோகம்

கூடலூர் பகுதியில் காபி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
காபி விளைச்சல் அமோகம்
Published on

கூடலூர்

கூடலூர் பகுதியில் காபி விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காபி விளைச்சல்

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை தென்மேற்கு பருவமழையும், அதன்பிறகு வடகிழக்கு பருவமழையும் பெய்வது வழக்கம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் குறுமிளகு உள்ளிட்ட பணப்பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், அவ்வப்போது பரவலாக பெய்த மழையால் காபி செடிகள் நன்கு பூத்தது. மேலும் காபி விளைச்சல் அமோகமாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கை கொடுக்கிறது

இந்த நிலையில் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பரவலாக மழை பெய்தது. இதனால் தேயிலை, காபி விவசாயத்துக்கு ஏற்ற காலநிலை நிலவுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டில் பருவமழை முறையாக பெய்யவில்லை. வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் நெல், குறுமிளகு உள்ளிட்ட விவசாயம் பாதித்துள்ளது. ஆனால் காபி விளைச்சல் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.

2-வது சீசன்

தொடர்ந்து காபி வாரிய அலுவலர்கள் கூறுகையில், கூடலூர் பகுதியில் அரபிக்கா, ரொபஸ்டா ரக காபிகள் விளைகிறது. தற்போதைய சீசனுக்கு ஏற்ப காபி விளைச்சல் அமோகமாக உள்ளது. ஆனால் தொடர்ந்து மழை பெய்யாமல் உள்ளதால் 2-வது சீசனுக்கு போதிய ஈரத்தன்மை இல்லாமல் போனால் காபி விளைச்சல் பாதிக்க வாய்ப்புள்ளது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com