நகைக்காக ஆசைப்பட்டு பெரியப்பாவை விஷம் வைத்து கொன்ற தம்பி மகன் - இறுதி சடங்கின்போது வெளிவந்த உண்மை

காஞ்சிபுரத்தில் நகைகளுக்கு ஆசைப்பட்டு தனது பெரியப்பாவான 75 வயது முதியவரை, இளைஞர் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நகைக்காக ஆசைப்பட்டு பெரியப்பாவை விஷம் வைத்து கொன்ற தம்பி மகன் - இறுதி சடங்கின்போது வெளிவந்த உண்மை
Published on

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் நீர்வள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் 75 வயது முதியவர் கோவிந்தன். இவர், திடீரென வீட்டில் உயிரிழந்து கிடந்த நிலையில், உறவினர்கள் முன்னிலையில் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.

அப்போது, வீட்டிலிருந்த பீரோவில் பணம் எடுக்க சென்ற முதியவரின் மகன் கிருஷ்ணன், பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், முதியவரின் தம்பி மகனான பாட்ஷா, நகை மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு தனது பெரியப்பாவான கோவிந்தனை விஷம் வைத்து கொன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பாட்ஷாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 69 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com