ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்

நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயமானார்.
ஆற்றில் மூழ்கி வாலிபர் மாயம்
Published on

நன்னிலம்:

நன்னிலம் அருகே உள்ள இலவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது24). இவர் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மாலை இவரது தம்பி கணேஷ், நண்பர் முகேஷ் ஆகியோருடன் கங்களாஞ்சேரியில் உள்ள வெட்டாற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கார்த்திக், ஆற்றில் மூழ்கி மாயமானார்.இதனை பார்த்த அவரது நண்பர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com