பெண்ணை தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

ஏர்வாடி அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண்ணை தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
Published on

ஏர்வாடி:

ஏர்வாடி அருகே உள்ள கீழகட்டளையை சேர்ந்தவர் அருண் முகேஷ் ராஜா மனைவி செலினா (வயது 30). இவருக்கும், அதே தெருவை சேர்ந்த அர்ஜூணன் மகன் விக்னேஷ் (30) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று செலினா தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விக்னேஷுக்கும், செலினாவுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், செலினாவை உடைந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டால் தலையில் தாக்கினார். இதில் காயமடைந்த செலினா ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விக்னேஷை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com