தங்கும் விடுதி ஊழியரின் செல்போன் திருட்டு

தங்கும் விடுதி ஊழியரின் செல்போன் திருட்டு
Published on

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் கார்த்திக் (வயது 24). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இரவு பணியில் இருந்த இவர் நள்ளிரவில் செல்போனை அருகே வைத்துவிட்டு தூங்கிவிட்டார். மீண்டும் எழுந்து பார்த்தபோது செல்போன் மாயமாகி இருந்தது. அதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் ஆகும். அந்த தங்கும் விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதிகாலையில் விடுதியில் நுழைந்த ஒரு மர்ம நபர் செல்போனை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக முகேஷ் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com