கோட்டப்பட்டி அருகேலாரியை வழிமறித்து நெல் மூட்டைகள் திருட்டுபோலீசார் விசாரணை

கோட்டப்பட்டி அருகேலாரியை வழிமறித்து நெல் மூட்டைகள் திருட்டுபோலீசார் விசாரணை
Published on

அரூர்:

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியில் இருந்து நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றிக்கொண்டு அரூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். நரிப்பள்ளி பகுதியில் சிலர் லாரியை வழிமறித்து கிருஷ்ணனை லாரியில் இருந்து இறக்கி விட்டனர். பின்னர் லாரியை எடுத்துச் சென்ற அவர்கள் கோட்டப்பட்டி பகுதியில் லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு அதில் இருந்த நெல் மூட்டைகளில் ஒரு பகுதியை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com