நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: டிரைவர் கைது

வீட்டில் திருட்டு நடந்ததாக நடிகர் ரவிமோகன் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: டிரைவர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பிரபல நடிகர் ரவி மோகனின் வீடு உள்ளது. இந்த நிலையில், வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் வைரச் செயின் திருடு போனதாகவும் உதவியாளர், பணிப்பெண் உட்பட 5 பேர் மீது சந்தேகம் எனவும் ரவி மோகனின் மேலாளர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் வீட்டில் நடந்த திருட்டில் ரமேஷ் என்பரை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது ரூ.2.5 லட்சம் திருடியதாக ரமேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com