அச்சரப்பாக்கம் அருகே ஸ்டூடியோ பூட்டை உடைத்து திருட்டு

அச்சரப்பாக்கம் அருகே ஸ்டூடியோ பூட்டை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்றனர்.
அச்சரப்பாக்கம் அருகே ஸ்டூடியோ பூட்டை உடைத்து திருட்டு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு பகுதி அப்துல் கலாம் தெருவை சேர்ந்தவர் பாலு (வயது 30). இவர் தொழுப்பேடு- சூனாம்பேடு நெடுஞ்சாலையில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், ஸ்டூடியோவுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு அங்கு இருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புகைப்பட கேமரா மற்றும் 4 பென்டிரைவ் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com