வீட்டின் பூட்டை உடைத்து 2½ பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருட்டு

சிறுகனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2½ பவுன் நகை-ரூ.50 ஆயிரத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் ராம்ஜிநகரில் பெண்ணிடம் மர்ம ஆசாமிகள் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 2½ பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருட்டு
Published on

சிறுகனூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை-ரூ.50 ஆயிரத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் ராம்ஜிநகரில் பெண்ணிடம் மர்ம ஆசாமிகள் தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.

வெல்டர்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கச்சமங்கலம் அந்தோனியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 32). இவர் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இதனால், அவர் சிறுகனூர் மெயின் ரோடு தச்சங்குறிச்சி கிராமத்தில் கருப்பாயி என்பவரது வீட்டில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கர் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள நெய்குப்பை கிராமத்துக்கு சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைந்து கிடந்தது.

நகை-பணம் திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 2 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்து பாஸ்கர் காணக்கிளியநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன்சிங், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

ராம்ஜிநகர்

திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள நவலூர் குட்டப்பட்டு வடக்கு மேடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சாந்தி (36). இவர் திருச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவு 7 மணி அளவில் வேலையை முடித்துவிட்டு பஸ்சில் . வண்ணாங்கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரை வழிமறித்து கழுத்தில் கிடந்த முக்கால் பவுன் தாலி மற்றும் அரை பவுன் சங்கிலி ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com