250 கிலோ இரும்பு கம்பிகள் திருட்டு; 2 பேர் மீது வழக்கு

250 கிலோ இரும்பு கம்பிகள் திருட்டுபோனது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
250 கிலோ இரும்பு கம்பிகள் திருட்டு; 2 பேர் மீது வழக்கு
Published on

திருச்சி பஞ்சப்பூரில் உள்ள ஒரு பேக்கரி கடை பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கான குழாய்கள் மற்றும் இரும்பு கம்பிகள் சாலையோரம் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கிருந்து 250 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இது பற்றி தினேஷ் என்பவர் எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி(வயது 22) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com