கோவிலில் உண்டியல் பணம் திருட்டு

கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
Published on

கொல்லங்கோடு, 

கொல்லங்கோடு அருகே உள்ள நடுவத்தன்முறி பகுதியில் வனதுர்கா கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பூஜைகள் முடிந்து அனைவரும் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று காலையில் கோவில் செயலாளர் ஜெயதனேஷ் கோவிலுக்கு வந்த போது முன்பக்கம் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடு போய் இருந்தது. இரவில் யாரோ மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஜெயதனேஷ் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com