தோட்டத்தில் மின்வயர் திருட்டு

கூடலூர் அருகே தோட்டத்தில் மின்வயர் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தோட்டத்தில் மின்வயர் திருட்டு
Published on

கூடலூர் 4-வது வார்டு கோட்டை கருப்புசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). விவசாயி. இவருக்கு வெயில் காஞ்சான் புலம் பகுதியில் தோட்டம் உள்ளது. அங்கு தென்னை மரங்களை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் இருந்த 20 மீட்டர் மின் வயர்களை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதேபோல் அதே பகுதியில் பழனிசாமி என்பவரது தாட்டத்தில் 15 மீட்டரும், பிரசன்னா மணி என்பவரின் தோட்டத்தில் 35 மீட்டரும் மின்வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து மின்வயர்களை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். தோட்டங்களில் வயர் திருட்டு சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com