வீட்டில் பொருட்கள் திருட்டு

பாளையங்கோட்டை அருகே வீட்டில் பொருட்கள் திருடப்பட்டது.
வீட்டில் பொருட்கள் திருட்டு
Published on

பாளையங்கோட்டை அருகே உள்ள மணப்படை வீடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி ராமலட்சுமி (வயது 66). தற்போது இவர் சென்னையில் வசித்து வருகிறார். ஏதாவது முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மட்டுமே இங்கு வந்துசென்றுள்ளார்.இந்தநிலையில் அவரின் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த பித்தளை பொருட்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ராமலட்சுமி பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com