வீட்டில் நகை, பணம் திருட்டு

நாங்குநேரி அருகே வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வீட்டில் நகை, பணம் திருட்டு
Published on

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 45). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு குளத்து வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கிரில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com