பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

கச்சேரிநடையில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
Published on

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு அருகே உள்ள கச்சேரிநடை ஈந்திக்காடு வீட்டை சேர்ந்தவர் பத்மாவதி அம்மா (வயது 66). இவர் சில நாட்களுக்கு முன்பு பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த தனது தம்பியை உடனிருந்து கவனிப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். பின்பு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் வைத்திருந்த பவுன் கம்மல், 2 பவுன் தங்க சங்கிலி, ரூ.7,500 ஆகியவை திருடபட்டிருந்தது. இது சம்பந்தமாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com