ஆசிரியர்கள் எனக்கூறி முதியவர்களை ஏமாற்றி நூதன முறையில் நகை, பணம் திருட்டு

கந்திலி அருகே வீட்டில் தனியாக இருந்த முதியவர்களை நூதன முறையில் ஏமாற்றி நகை, பணத்தை திருடிச்சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆசிரியர்கள் எனக்கூறி முதியவர்களை ஏமாற்றி நூதன முறையில் நகை, பணம் திருட்டு
Published on

ஆசிரியர்கள்

கந்திலி அடுத்த ராஜாவூர் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. கசிநாயக்கன்பட்டி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி கலைச்செல்வி சுந்தரம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரயையாக வேலை பார்க்கிறார். இவர்கள் இருவரும் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டனர்.

இளங்கோவின் பெற்றோர்கள் குப்பன் (வயது 75), சாந்தி (70) ஆகிய இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் குப்பன் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் உங்களுடைய மகன் பணிபுரியும் பள்ளியில் நாங்கள் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறோம் என்று பேச்சுக்கொடுத்து கொண்டே வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

நகை- பணம் திருட்டு

பின்னர் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர். வீட்டில் இருந்த குப்பன் அவரது மனைவி ஆகிய இருவரும் சந்தேகத்தின்பேரில் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த நகை, பணம் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.

உடனடியாக இது குறித்து தனது மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த இளங்கோ கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் முதியவர்களை நூதன முறையில் ஏமாற்றி நகை, பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com