

தென்காசி அணைக்கரை தெருவை சேர்ந்தவர் எகியா அலி (வயது 53). இவர் சுவாமி சன்னதி பஜாரின் கீழ் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.64 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. கதவு பூட்டி கிடந்த நிலையில் பணம் திருட்டு போனது எப்படி என்று பார்த்தார். அப்போது கடையின் ஒரு பக்க சுவரில் துளை போட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர்கள் சுவரில் துளை போட்டு பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தென்காசி போலீசில் எகியா அலி செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.