மளிகைக்கடையில் ரூ.25 ஆயிரம் திருட்டு

மளிகைக்கடையில் ரூ.25 ஆயிரம் திருட்டு போனது.
மளிகைக்கடையில் ரூ.25 ஆயிரம் திருட்டு
Published on

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம், கல்லூர் ஊராட்சி சுதந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி கோமதி(வயது 32). இவர் அங்குள்ள அம்மன் கோவில் வீதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்த பின்னர் இரவில் கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பின்புற இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த மர பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து ரூ.25 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கோமதி கொடுத்த புகாரின்பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com